ஆய்வு யானையை கொன்ற வேட்டையாளர்களுக்கு தடை

பொட்ஸ்வானாவில் ஆய்வு யானை ஒன்றைச் சுட்டுக் கொன்ற 2 நிபுணத்துவ வேட்டையாளர்களின் வேட்டை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

யானையைக் கொன்றதோடு அதன் தடயங்களை அழிக்க இருவரும் முயன்றுள்ளனர்.

யானை கடந்த மாத இறுதியில் சுடப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து வேட்டையாளர்கள் இருவரும் அவர்களது உரிமத்தை அரசாங்கத்திடம் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.

வேட்டையாளர்கள் எந்த நாட்டினர் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.

வேட்டையாளர்கள் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று பொட்ஸ்வானா கேட்டுக்கொண்டது.

ஆபிரிக்காவின் மற்ற நாடுகளில் யானைகளின் எண்ணிக்கை குறைந்து வந்துள்ள போதும் பொட்ஸ்வானாவில் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

1990களில் 80,000 யானைகளே இருந்தன. தற்போது அங்கு 130,000 யானைகள் வாழ்ந்து வருகின்றன.

Tue, 12/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை