கிறிஸ்மஸ் பிரார்த்தனையில் நிபந்தனையற்ற அன்பை வலியுறுத்திய பாப்பரசர்

கிறிஸ்மஸ் பிரார்த்தனையில் நிபந்தனையற்ற அன்பை வலியுறுத்திய பாப்பரசர்

எம்மிடையே உள்ள மோசமானவர்கள் உட்பட இறைவன் அனைவர் மீதும் அன்பு செலுத்துகிறான் என்று பாப்பரசர் பிரான்சிஸ் கிறிஸ்மஸ் கூட்டு வழிபாட்டில் தெரிவித்தார். 

வத்திக்கானின் புனித பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்மஸ் நள்ளிரவுக் கூட்டுப் பிரார்த்தனையில் பாப்பரசர் உரையாற்றும்போது ஆயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்தனர்.  

“நீங்கள் தவறான சிந்தனையை பெற்றிருக்கலாம், முழுமையான குழப்பமான விடயங்களை செய்திருக்கலாம் ஆனால் இறைவர் தொடர்ந்து உங்களுக்கு அன்பு செலுத்துகிறான்” என்று ஆர்ஜன்டீனாவைச் சேர்ந்தவரான பாப்பரசர் தெரிவித்தார்.  

திருச்சபை முகம்கொடுத்திருக்கு பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் மற்றும் ஊழல் விவகாரங்களை குறித்தே பாப்பரசர் பேசி இருப்பதாக சிலர் இந்த உரைக்கு விளக்கம் அளித்துள்ளனர்.  

இந்நிலையில் நேற்று பின்நேரத்தில் பாப்பரசர் பிரான்சிஸ் தம் அதிகாரப்பூர்வ கிறிஸ்மஸ் தின வாழ்த்துகளைத் தெரிவிக்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நள்ளிரவு நடைபெற்ற வழிப்பாட்டில் வெனிசுவெலா, ஈரான், உகண்டா போன்ற நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுவர்கள் கலந்துகொண்டனர்.  

இதன்போது புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் பாப்பரசர் பிரான்சிஸ், குழந்தை இயேசு சொரூபத்திற்கு முத்தமிட்டு சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து நற்செய்தி குறித்த போதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்து, கிறிஸ்மஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். 

தேவாலயத்தின் முன் கூடியிருந்த பல்லாயிரக் கணக்கானோர் முன்பு பேசிய பாப்பரசர், குழந்தைகளை நேசித்து அவர்களிடம் இருந்து அன்பான விடயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

நாம் வாழும் வாழ்க்கை ஆடம்பரம் மிக்கது என்பதை அறிந்து கொள்ளவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

எளிமையான தூய்மையான வாழ்வை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்றும், பொருளைச் சார்ந்து இல்லாமல், எளிமையான வாழ்வுக்கு பழகிக் கொள்ளவேண்டும் எனவும் பாப்பரசர் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

உலகின் 1.5 பில்லியன் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடுகின்றனர். இதேவேளை உலகின் அனைத்து தேவாலயங்களிலும் நத்தார் தின சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

Thu, 12/26/2019 - 10:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை