பெண்கள் உலகக் கிண்ணம்: இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தத் திட்டம்

பெண்கள் உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டிகளை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தத் திட்டமிடுவதாக சர்வதேச கால்பந்துச் சம்மேளனத்தின் தலைவர் ஜியானி இன்பான்டினோ தெரிவித்துள்ளார்.

தற்போது பெண்கள் உலகக் கிண்ணப் போட்டி, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. போட்டிகளை ஈராண்டுக்கு ஒருமுறை நடத்தினால் தரத்தில் அந்தப் போட்டி மேலும் மேம்படுமென்று இன்பான்டினோ கூறினார்.

இந்தப் புதிய திட்டத்தை பிரான்ஸ் கால்பந்துச் சம்மேளனம் முன்வைத்தது. 2015, 2019ஆம் ஆண்டு நடந்த போட்டிகளில் அமெரிக்கப் பெண்கள் கால்பந்து அணி சம்பியனானது.

2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பெண்கள் உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 24 இல் இருந்து 32 ஆக அதிகரிப்பதற்கு பிஃபா ஏகமனதாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

Mon, 12/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை