யெமனில் இராணுவ அணிவகுப்பில் ஏவுகணை வீச்சு: ஐவர் உயிரிழப்பு

தெற்கு யெமனில் இராணுவ அணிவகுப்பு ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

அல் தஹ்லி நகரில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆதரவு பெற்ற பலம்மிக்க பாதுகாப்பு பிரிவு ஒன்றின் ஆட்சேர்ப்புக்கான பட்டமளிப்பு நிகழ்வு ஒன்றின் முடிவிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக யெமன் அரசு முன்னெடுத்துள்ள போர் நடவடிக்கையில் முக்கிய கூட்டணியாக இந்தப் பாதுகாப்பு பிரிவு உள்ளது.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஹூத்தக்கள் இருப்பதாக அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுவரை ஹூத்திக்கள் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்காதபோதும் கடந்த ஆண்டு ஓகஸ்டில் இது போன்ற படைகளின் பட்டமளிப்பு நிகழ்வின் மீதும் ஹூத்திக்கள் தாக்குதல் நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் நாட்டின் மேற்கு பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த நிலையில் ஜனாதிபதி அப்ரப்பு மன்சூர் ஹதி நாட்டை விட்டு தப்பியோடியதை அடுத்து யெமனில் உள்நாட்டு யுத்தம் வெடித்தது.

Tue, 12/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை