பயணிகளுக்கான வரிக்குறைப்பு பற்றி இலங்கை-இந்தியா ஆராய்வு

இந்திய அரசின் முழு ஒத்துழைப்பு மற்றும் 300 மில்லியன் நிதி உதவியில் பலாலி விமான நிலையமானது பிராந்திய விமான நிலையமாக மாற்றியமைக்கப்படுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இந்திய உயர் ஸ்தானிகர் தரஞ்சித் சந்து சிங் மற்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்றுமுன்தினம் அவரது அமைச்சில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலின் பின்னரே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இங்கு மேலும் கூறுகையில்,

இந்தியாவின் உதவியுடன், யாழ்ப்பாண விமான நிலையத்தில் பயணிகள் முனையம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. பயணிகள் பெல்ட் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விமான நிலையம் சரியாக இயங்க முடியாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண விமான நிலையத்திலிருந்து வெளியேறும் பயணிகளுக்கு வரி குறைப்புக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது. அத்துடன், யாழ்ப்பாண விமான நிலையத்தில் பொதுவான விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் தரையிறக்கும் கருவிகள் இல்லை என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 12/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை