ஊடகவியலாளர் மீது தாக்குதல் ;ஒருவர் கைது

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய மஞ்சுள பெரேரா என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

உள்ளூர் சுவிஸ் தூதரக ஊழியராக தன்னை காண்பித்துக் கொண்ட இவர் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது ஊடகவியலாளர் ஒருவர் மீது நேற்று பிற்பகல் தாக்குதல் நடத்தினார்.

லேக்ஹவுஸ் புகைப்பட ஊடகவியலாளர் கயான் புஷ்பிக்க மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டதோடு இது தொடர்பில் அவர் வாழைத்தோட்ட பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து நேற்று மாலை கொழும்பு பிரதம நிதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர் செய்தனர்.

இதன் போது அவரை ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா சரீர பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார். சந்தேகநபர், களனி ஜ.தே.க அமைப்பாளர் பெவன் பெரேராவின் புதல்வர் என அறியவருகிறது.

Fri, 12/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை