ஹொங்கொங் பொலிஸ் விசாரணையில் இருந்து நிபுணர்கள் விலகல்

ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டங்களின் போதான பொலிஸாரின் நடத்தை குறித்த விசாரணையில் ஹொங்கொங்கின் பொலிஸ் கண்காணிப்புக் குழுவுக்கு ஆலோசனை வழங்கும் சுயாதீன குழுவில் இருந்து ஐந்து வெளிநாட்டு நிபுணர்களும் வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் வெளியேறியதாக செய்திகள் வெளியானபோதும் (புதன்கிழமை) அறிக்கையை வெளியிட்ட குறித்த ஆணைக்குழு, இதுவரை அவர்கள் செய்த பணிக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன் அவர்களின் இராஜினாமாவை உறுதிப்படுத்தவில்லை.

ஆனால் சுதந்திரமான விசாரணை குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் அவர்கள் வெளியேறியுள்ளதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

விசாரணை நம்பகத்தன்மை மற்றும் பக்கச்சார்பின்றி விசார ணை நடத்தும் சுயாதீன பொலிஸ் கண்காணிப்புக் குழுவில் கடந்த செப்டெம்பர் மாதத்தில் அவுஸ்திரேலியா, பிரித்தானியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Thu, 12/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை