ஜோர்தான், எகிப்துக்கு அமெரிக்க மோப்ப நாய்களை அனுப்ப தடை

எகிப்து மற்றும் ஜோர்தானுக்கு வெடிபொருட்களை கண்டறியும் மோப்ப நாய்களை அனுப்புவதை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. அந்த நாடுகளில் அலட்சியத்தால் பல நாய்களும் உயிரிழந்ததை அடுத்தே அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது.

“நாயின் இறப்பு கடும் துன்பத்திற்குரியது” என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். அண்மைய ஆண்டுகளில் ஜோர்தான், எகிப்து மற்றும் மேலும் எட்டு நாடுகளுக்கு அனுப்பப்பட்ட 100க்கும் அதிகமான நாய்களை பராமரிப்பதில் அலட்சியம் காண்பிக்கப்படுவதாக சம்பவங்கள் குறித்து அமெரிக்காவின் அறிக்கை ஒன்று அவதானம் செலுத்தி இருந்தது.

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே பயிற்சி அளிக்கப்பட்ட அமெரிக்க மோப்ப நாய்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்த விடயம் குறித்து ஜோர்தான் மற்றும் எகிப்து தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இந்த தற்காலிகத் தடையை அமெரிக்கா அறிவித்தது. மேலும் உயிரிழப்புகளை தடுக்கும் முயற்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

நாய் மற்றும் அதனை கையாள்பவர் என 10 மோப்ப நாய் குழுக்களை வெளிநாட்டுக்கு 30 நாள் பயிற்சிக்கு அனுப்புவதற்கு 640,000 டொலர்கள் செலவாவதாக அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தவிர மிருக வைத்தியம் மற்றும் ஏனைய உதவிகளுக்கு ஆண்டுக்கு மில்லியன் டொலர்கள் வரை செலவாகிறது.

Wed, 12/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை