ஏவுகணை சோதனை மூலம் வடகொரியா எச்சரிக்கை

வட கொரியா தனது ஏவுகணை பாய்ச்சும் தளத்திலிருந்து மற்றொரு சோதனையை வெற்றிகரமாய் நடத்தியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தச் சோதனை மிக முக்கியமானது என்றுமட்டும் அது குறிப்பிட்டது. எது சோதித்துப் பார்க்கப்பட்டது என்பது குறித்த விபரங்களை, வட கொரியச் செய்தி நிறுவனம் தெரிவிக்கவில்லை.

கடந்த வியாழக்கிழமை, அமெரிக்கா பசிபிக் பெருங்கடலில் இடைத்தொலைவு ஏவுகணை ஒன்றைச் சோதனை செய்ததைத் தொடர்ந்து, பியோங்யாங்கின் அண்மைய அறிவிப்பு வந்துள்ளது.

இருநாட்டுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் புதிய சலுகைகளை இவ்வாண்டு இறுதிக்குள் அறிவிக்கும்படி வொஷிங்டனை வட கொரியா வலியுறுத்தி வருகிறது. அவ்வாறு செய்யத் தவறினால், விரும்பத்தகாத கிறிஸ்மஸ் பரிசு ஒன்றை வழங்கப் போவதாக வட கொரியா எச்சித்துள்ளது.

Mon, 12/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை