ஈழத்துக் கலைஞன்

2019.12.22ஆம் திகதி மத்திய கொழும்பு இந்துக் கல்லூரியில் வி.பி.கணேசனின் நினைவுதின நிகழ்வு நடைபெறும்

வி. பி. கணேசன் என்றழைக்கப்படும் வைத்திலிங்கம் பழனிசாமி கணேசன்  இலங்கை ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற மலையகத் தொழிற்சங்கத்தின்  நிறுவனரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். தொழிற்சங்க  அரசியலில் இருந்து திரைப்படத் துறைக்கு வந்தவர். இலங்கையில் மூன்று தமிழ்த்திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்தவர்.

வைத்திலிங்கம் பழனிச்சாமி, திருமதி தெய்வானையின்   தலைமகனாக 22.04.1934பிறந்தவர் வி.பி.கணேசன்  கணேசன் எட்டியாந்தொட்டை புதினகேப்ரியில்  கல்லூரியில் தனது ஆரம்பக்கல்வியைத்   தொடங்கிய அவர் , கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையிலும் (க.பொ.த) உயர்தரப்  பரீட்சையிலும் சித்தி பெற்று அதே பாடசாலையில் ஆசிரியரானார். இவர் ஆசிரியராக கடமையாற்றிவரும்போது இதே பாடசாலையில் பயின்ற தேயிலைத்தோட்ட முகாமையாளர் ஒருவரின் மகளுக்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டது.  இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்க கணேசனுக்கு உறவுக்கார பெண்ணை நிச்சயித்தாா்கள். கணேசன் இதனை எதிர்த்து வீட்டை விட்டு வௌியேறினார். ஆசிாியர் தொழிலும் பறிபோனது. எனவே வியாபாரம் செயயத் தொடங்கினார். அதன் தான் காதலித்த பெண்ணின் வீட்டாரின் சம்மதத்துடன் காதலியை கரம் பிடித்தார். பல்வேறு வியாபாரங்கள் செய்த பார்த்த அவர், தையல் வேலையும் செய்து பார்த்து சரிவராததன் காரணமாக வானொலி திருத்தும் வேலையை ஆரம்பித்து வேலைக்கு ஆட்கள் வைத்து நடத்தி வந்தார். காலப்போக்கில் வானொலி உதிரிப்பாகங்களையும் விற்பனை செய்யத் தொடங்கினார்.

காலப்போக்கில் தொழிற்சங்கவாதியாக மிளிர்ந்தவர், இலங்கை கலைத்துறைக்கும் பாரிய பங்களிப்பை செலுத்தினார். கொழும்பில் இருந்த மேடை நாடக கலைஞர்களை சினிமாவுக்கு கொண்டு வந்தவரும் இவரே ஆவார்.

புதிய காற்றின் மூலம் இலங்கை தமிழ் திரைப்படத்துறைக்கு பிரவேசித்த  இவர், அந்த படத்துடன் நான் உங்கள் தோழன், நாடு போற்ற வாழ்க ஆகிய படங்களையும் தயாரித்தார்.

 

Sat, 12/21/2019 - 08:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை