சீனாவில் 850 பொருட்களின் இறக்குமதி வரி குறைப்பு

சீனா, 850க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான இறக்குமதி வரியை ஜனவரி முதலாம் திகதியிலிருந்து தற்காலிகமாய்க் குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

சில பொருட்களுக்கான இறக்குமதி வரி 30 வீதத்தில் இருந்து 7 வீதமாகவும், சிலவற்றுக்கு 12இல் இருந்து 8 வீதமாகவும் குறைக்கப்படுகிறது. உறைய வைக்கப்பட்ட பழங்கள், சிலவகைப் பகுதி மின்கடத்திகள், பன்றி இறைச்சி போன்றவற்றின் இறக்குமதி வரி குறைக்கப்படுவதாகச் சீன நிதியமைச்சு குறிப்பிட்டது.

வரியைக் குறைப்பதன் மூலம், மெதுவடைந்துவரும் பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிட முடியுமெனச் சீனா நம்புகிறது. அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள வர்த்தகப் பூசல் காரணமாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி 30 ஆண்டுகள் காணாத அளவுக்குக் குறைந்துள்ளது.

பாரிய விநியோக இடைவெளி மற்றும் விலைகளை கட்டுப்படுத்துவதில் சீனா பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tue, 12/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை