சுனாமி 'பேபி 81' வீட்டில் தூபி அமைத்து அஞ்சலி

சுனாமி தாக்கத்தின' போது காணாமல் போய் பின்னர் கண்டு பிடிக்கப்பட்டு வைத்தியசாலையில் 9தாய்மார்கள் உரிமை கோரிய சுனாமி பேபி 81என்ற கல்முனையைச் சேர்ந்த ஜெயரராஸ் அபிலாஸ் தனது களுதாவளை இல்லத்தில் நிர்மாணித்துள்ள சுனாமி நினைவுத்தூபியில்  நேற்று  (26)  தனது பெற்றோருடன்  விளக்கேற்றி மலரஞ்சலி செலுத்தினார். 67நாட்களே ஆன அபிலாஸ் கடலலைகளினால் அள்ளுண்டு செல்லப்பட்டு அரை நாட்களின் பின்னர்  பாறையொன்றினுள் புகுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.

கல்முனை ஆதார வைத்தியசாலையில் தாதியர்களின் பராமரிப்பில் வைக்கப்பட்டிருந்த அபிலாஸை 9தாய்மார்கள் தனது பிள்ளையென உரிமை கோரியபோது நீதிமன்றம் சென்று டி.என்.ஏ பரிசோதனையின் மூலம் தந்தையான ஜெயராஜிடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது 10ம் ஆண்டில் கல்வி பயிலும் உலகப்புகழ் பெற்ற அபிலாஸ் ஒரு வைத்தியராகவேண்டும் என்ற கனவில் வாழ்கிறார்.

மட்டக்களப்பு குறூப் நிருபர்

Fri, 12/27/2019 - 09:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை