போயிங் ‘737 மெக்ஸ்’ ரக விமான உற்பத்தி நிறுத்தம்

போயிங் நிறுவனம், அதன் சிக்கலுக்குள்ளான 737 மெக்ஸ் ரக விமானங்களின் உற்பத்தியை வரும் ஜனவரி தொடக்கம் தற்காலிகமாக நிறுத்தவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இரண்டு போயிங் 737 மெக்ஸ் ரக விமானங்கள் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து பாதுகாப்புக் காரணங்களுக்காக கடந்த மார்ச் மாதம் முதல் அவை சேவைகளில் இருந்து நிறுத்தப்பட்டன.

வோல் ஸ்ட்ரீட் பங்குச் சந்தையில் போயிங் நிறுவனத்தின் பங்குகள் சரிந்துள்ள வேளையில் 737 மெக்ஸ் ரக விமானங்களின் உற்பத்தி நிறுத்தப்படுகிறது. நிறுவனங்கள் வர்த்தக விமானங்களின் உற்பத்தியை நிறுத்த முடிவெடுப்பது மிக அரிது என்பது குறிப்பிடத்தக்கது.

போயிங் நிறுவனம், விநியோகிப்பாளர்கள், விமானச் சேவை நிறுவனங்கள் ஆகியவற்றின்மீது இந்த நடவடிக்கை அதிக தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

737 மெக்ஸ் ரக விமானங்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டாலும் ஆட்குறைப்பு நடவடிக்கை எதையும் மேற்கொள்ளப் போவதில்லை என்று போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

“நாங்கள் எதிர்பார்த்ததை விட மெக்ஸ் சேவை நிறுத்தப்படுவது தொடர்ந்தால் எங்கள் உற்பத்தித் திட்டங்களை தொடர்ந்து மதிப்பீடு செய்வோம் என்று நாங்கள் முன்னரே கூறியுள்ளோம்” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

“அதன்படியே ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டு தயாராக இருக்கும் விமானங்களை விற்பனை செய்வதற்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளோம். அடுத்த மாதம் தொடக்கம் 737 மெக்ஸ் விமான உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியாவில் 737 மெக்ஸ் ரக விமானங்கள் விபத்துக்கு உள்ளானதில் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். விமானத்தின் புதிய தொழில்நுட்ப அம்சத்தில் பழுது இருப்பதாக அப்போது கூறப்பட்டது.

வொஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டலிலிருந்து இயங்கிவரும் போயிங் நிறுவனம் அமெரிக்காவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக உள்ளது.

விபத்துகளுக்கு காரணமான

Wed, 12/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை