60 வாகனங்கள் குவியலாக மோதி 50 பேருக்கு காயம்

அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் பனிமூட்டத்திற்கு மத்தியில் 60க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தினால் உயிராபத்து எற்படாதபோதும் 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதோடு அதில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மூடுபனி மற்றும் பனிச் சூழல் இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த விபத்துக் காரணமாக வீதி நெடுகிலும் கார்கள் மற்றும் ஏனைய வண்டிகள் ஒன்றின் மீது ஒன்று நொறுங்குண்டு காணப்படும் படங்கள் வெளியாகியுள்ளன.

Tue, 12/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை