பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இலங்கை அணி 5 /202 ஓட்டங்கள்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள் பெற்றிருந்த போது மழை காரணமாக போட்டி 68.1 ஓவர்கள் பந்து வீசிய நிலையில் முடிவுக்கு வந்தது.

பாகிஸ்தான் ராவல்பிண்டி மைதானத்தில் 10 வருடங்களுக்கு பின்னர் சர்வதேச போட்டிகள் நேற்று ஆரம்பமானது முக்கிய அம்சமாகும்.நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் தனது அணி துடுப்பெடுத்தாடும் என்பதற்கு அமைய திமுத் கருணாரத்ன- ஓஷத பெர்னாண்டோ இரு வரும் களமிறங்கி நிதானமாக ஆடிய வேளை அணியின் தலைவர் கருணாரத்ன 59 ஓட்டங்கள் பெற்ற நிலையில் சஹீக் ஷா அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார்.பின்னர் ஓஷத பெர்னாண்டோவுடன் இணைந்தார் குசல் மென்டிஸ் இருவரும் நல்லதொரு இணைப்பாட்டம் வழங்குவார்கள் என்ற நிலையில் ஓஷத 40 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார்.பின்னர் மென்டிஸ் 10 ஓட்டங்கள் பெற்ற போது ஆட்டமிழந்தார்.

பின்னர் மெத்திவ்ஸ் 31 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.இலங்கை அணிக்கு நீண்ட இடவெளிக்குப் பின்னர் அணியில் இணைந்த சந்திமால் இலங்கை அணிக்கு நீண்ட -திறமையாக ஆடுவார் என்ற நிலையில் அவர் வெறும் இரண்டு ஓட்டங்கள் பெற்று மீண்டும் ஏமாற்றத்தை தந்து வெளியேறினார்.பின்னர் தனஞ்சய டி சில்வா -திக்வெல்ல இருவரும் நிதானமாகவும் அதிரடியாகவும் ஆடிய வேளை போதிய வெளிச்சம் இன்மையால் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

சில்வா 38 ஓட்டங்களுடனும் திக்வெல்ல 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

பந்து வீச்சில் நசீம் ஷா இரண்டு விக்கெட்டையும் அப்ரிடி,அப்பாஸ்,சின்வாரி தலா ஒரு விக்கெட்டை பதம் பார்த்தனர்.இன்று போட்டியின் இரண்டாம் நாளாகும்.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இதுவரையில் 53 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் 19 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியும், 16 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியும் வெற்றிபெற்றுள்ளன. இதில், 18 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன.

அத்துடன், பாகிஸ்தானில் இரண்டு அணிகளும் 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், பாகிஸ்தான் அணி 8 போட்டிகளிலும், இலங்கை 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இவ்வாறு பாகிஸ்தான் அணி முன்னிலையில் உள்ள போதும், இறுதியாக 2017/18 ஆம் ஆண்டு பருவகாலத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2--0 என இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

அதேநேரம், இறுதியாக பாகிஸ்தானில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடர், தீவிரவாத தாக்குதல் காரணமாக சமநிலைக்கு வந்ததுடன், குறித்த தொடருக்கு முன்னர் 2004/05 ஆம் ஆண்டு பருவகாலத்தில் இரண்டு அணிகளும் பாகிஸ்தானில் வைத்து மோதியதில், தொடர் 1--1 என சமநிலையாகியிருந்தது.

Thu, 12/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை