49 ஊடகவியலாளர்கள் 2019இல் கொல்லப்பட்டனர்

2019இல் உலகெங்கும் 49 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 16 ஆண்டுகளில் மிகக் குறைவான உயிரிழப்பு இதுவென்று அது குறிப்பிட்டுள்ளது. இதில் மோதல் நிலவும் யெமன், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானிலேயே அதிக ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பாரிஸை தளமாகக் கொண்ட அந்தக் கண்காணிப்புக் குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் ஊடகத் துறை தொடர்ந்து மிக ஆபத்தான ஒரு துறையாக இருப்பதாக அது எச்சரித்துள்ளது.

கடந்த இரண்டு தசாப்தங்களில் சராசரியாக ஆண்டுக்கு சுமார் 80 ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Wed, 12/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை