கியூபாவில் 43 ஆண்டுகளில் முதல்முறை பிரதமர் நியமனம்

கியூபாவில் 43 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் பிரதமராக மானுவல் மர்ரெரோ குரூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலாத் துறை அமைச்சராகப் பதவி வகித்த அவரை அந்நாட்டு ஜனாதிபதி மிகுவல் தியாஸ் கேனல் பிரதமராக நியமனம் செய்துள்ளார்.

கியூபாவில், 1976ஆம் ஆண்டு பிரதமருக்கான பதவி நீக்கப்பட்டது. புரட்சிகரத் தலைவர் பிடல் காஸ்ட்ரோவால் அந்தப் பதவி அகற்றப்பட்டது.

இவ்வாண்டு அரசியலமைப்பில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து பிரதமருக்கான பதவி மீண்டும் நடப்பிற்குக் கொண்டுவரப்பட்டது. 56 வயது மர்ரெரோ, ஜனாதிபதி பொறுப்புகள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்வார்.

இருப்பினும் அறிமுகம் கண்டுள்ள மாற்றங்கள் வெறும் கண்துடைப்பே என்று விமர்சகர்கள் குறைகூறியுள்ளனர்.

கியூபா கம்யூனிஸ்ட் கட்சியும் இராணுவமும் அங்கு முக்கியமான முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்திகளாகக் கருதப்படுவதே அதற்கு முக்கிய காரணம்.

Mon, 12/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை