நியூஸிலாந்துடனான முதல் டெஸ்ட்: ஆஸி 416 ஓட்டங்கள் குவிப்பு

நியூஸிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிற்காக அவுஸ்திரேலியா அணி, 416 ஓட்டங்களை குவித்துள்ளது.

பெர்த் மைதானத்தில் நேற்றுமுன்தினம் ஆரம்பமான இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி, நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 248 ஓட்டங்களை பெற்றது.

இதனைத் தொடர்ந்து நேற்று போட்டியின் இரண்டாவது தொடங்கிய அவுஸ்ரேலியா அணி, 416 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதில், அவுஸ்திரேலியா அணி சார்பில், டேவிட் வோர்னர் 43 ஓட்டங்களையும், ஜோ பர்ன்ஸ் 9 ஓட்டங்களையும், மார்னஸ் லபுஸ்சேகன் 143 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 43 ஓட்டங்களையும், மெத்தியு வேட் 12 ஓட்டங்களையும் ட்ராவிஸ் ஹெட் 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேலும், டிம் பெய்ன் 39 ஓட்டங்களையும், பெட் கம்மின்ஸ் 20 ஓட்டங்களையும், மிட்செல் ஸ்டாக் 30 ஓட்டங்களையும், நாதன் லியோன் 8 ஓட்டங்களையும், ஜோஷ் ஹெசில்வுட் ஓட்டமெவும் பெறாத நிலையிலும் களத்தில் இருந்தனர். நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், டிம் சவுத்தீ மற்றும் நெய்ல் வாக்னர் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும், கொலின் டி கிராண்ட்ஹோமி மற்றும் ஜூட் ராவல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

Sat, 12/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை