40,000 மெ.தொ நெல்லை அரிசியாக்க அரசு திட்டம்

விலையை கட்டுப்படுத்த துரித நடவடிக்ைக

சந்தைகளில் அரிசியின் விலை அதிகரித்துள்ள நிலையில் அரசாங்கத்திடமுள்ள 40,000 மெற்றிக் தொன் நெல்லை அரிசியாக்கி சந்தையில் விடுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் நலன்புரி இராஜாங்க அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

எதிர்வரும் வாரத்தில் ச.தொ.ச ஊடாக சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், சந்தைகளில் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக மக்கள் தமக்கு தெரிவித்து வருவதாகவும் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இதேவேளை, சாதாரண நாடு, சிவப்புப் பச்சை, சம்பா அரிசி வகைகள் கூட 100 ரூபா முதல் 150 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். சந்தைகளில் அரிசியின் விலை அதிகரித்துள்ளமை குறித்து தமக்கு தகவல் கிடைத்துள்ளது. அதற்கிணங்கவே அரசாங்கத்திடமுள்ள நெல்லை அரிசியாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் இதுவரை தீர்மானிக்கவில்லை என்றார். (ஸ)

 

Fri, 12/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை