கராத்தே சுற்றுப்போட்டியில் 39 பதங்கங்கள்

2019ஆம் ஆண்டிற்கான தேசிய சோட்டோகான் கராத்தே சுற்றுப்போட்டியில் 12 தங்கம் 15 வெள்ளி 12 வெண்கலம் அடங்கலாக 39 பதங்கங்களை பெற்ற ராம் கராத்தே சங்க மாணவர்கள் தமது சங்கத்திற்கும் பெற்றோருக்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்தனர்.

சுகததாச உள்ளக அரங்கில் 07ஆம் திகதி இடம்பெற்ற சோட்டோகான் கராத்தே சுற்றுப்போட்டியில் பங்கேற்ற ராம் கராத்தே சங்க மாணவர்களே இவ்வாறு சாதனை படைத்தனர். குறித்த சுற்றுப்போட்டியில் 9 மாகாணத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி 6 வயதிலிருந்து 21 வயதிற்குட்பட்ட 1600 ஆண் பெண் போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

காட்டா, குமித்தி மற்றும் குழுக்காட்டா என மூன்று பிரிவாக நடைபெற்ற போட்டியில் 12 தங்கம் பெறப்பட்டதோடு பரராஜசிங்கம் சரோன் சச்சின் 21 வயதிற்குட்பட்ட குழுக்காட்டாவில் தங்கப்பதக்கமும் குறித்த பிரிவின் ஆண் வீரருக்கான சிறந்த போட்டியாளர் விருதையும் பெற்றுக்கொண்டார்.

சரோன் சச்சின் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையின் மாணவன் என்பதுடன் இவருக்கான பயிற்சியை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஓய்வு நிலை பதவி நிலை உதவியாளரும் ராம் கராத்தே சங்கத்தின் ஸ்தாபகரும் பிரதம போதனாசிரியருமான சிகான் கே.ஹேந்திரமூர்த்தி தலைமையில் சென்சி கே.இராஜேந்திர பிரசாத் சென்சி கே.சாரங்கன் ஆகியோருடன் சிரேஸ்ட போதனாசிரியர்களான சென்சி எம்.பி.செயினுலாப்தின் மற்றும் சென்சி எம்.முரளீஸ்வரன் ஆகியோர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த ராம் கராத்தே சங்கத்தின் மாணவர்கள் கடந்த 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான தேசிய கராத்தே சுற்றுப்போட்டியில் காட்டா பிரிவில் வெண்கலமும், 2017ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் காட்டாவில் வெண்கலமும் குமித்தேயில் வெள்ளி பதக்கமொன்றையும் வென்றிருந்தனர்.

மேலும் கடந்த இரு வருடங்களாக அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மாணவர்கள் இவ்வாறு தேசிய மட்ட சாதனை மட்டுமல்லாது சர்வதேச போட்டிகளிலும் தொடரான சாதனை படைத்து வருவது அக்கரைப்பற்று மக்களுக்கு மட்டுமன்றி கிழக்கு வாழ் மக்களுக்கும் பெருமையை தருவதாக அமைந்துள்ளது. ராம் கராத்தே மாணவர்களின் வெற்றி யாவும் மறைந்த மாமனிதர் சிகான் க.ராமச்சந்திரன் அவர்களுக்கான சமர்ப்பணம் என வெற்றி பெற்ற மாணவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

வாச்சிக்குடா விஷேட நிருபர்

Tue, 12/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை