யங் சில்வர் கால்பந்தாட்ட கழக 35 வது வருட பூர்த்தியை முன்னிட்டு ஸ்டிக்கர்ஸ் வெளியீடு

கொழும்பு வெள்ளவத்தை யங் சில்வர் கால்பந்தாட்ட கழகத்தின் 35 வது வருட பூர்த்தியை முன்னிட்டு ஸ்டிக்கர்ஸ் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை (27) வெள்ளவத்தை க்ரான்ட் மஹால் பிளேஸில் மிக விமர்சையாக இடம்பெற்றது.

யங் சில்வர் கால்பந்தாட்ட கழகத்தின் செயலாளரும், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் மத்தியஸ்தரும், புத்தளம் ஒடிடாஸ் கழகத்தின் ஸ்தாபகருமான எம்.ஏ. செய்யது ரிபாயின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

கழகத்தின் செயற்பாடுகளை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்தல், உலகளாவிய ரீதியாக கழகத்துக்கான ஆதரவினை திரட்டுதல், கழகத்துக்கான ஆதரவு ரசிகர்கள் மத்தியில் எந்தளவுக்கு அமைந்துள்ளது என்பதை பரீட்சித்தல், 2020 ம் ஆண்டு வெற்றி வாய்ப்புகளை சுவீகரித்தல் போன்ற காரணங்களை உள்ளடக்கியே இந்த ஸ்டிக்கர்ஸ் வெளியீட்டு விழா ஏற்பாடாகியிருந்தது.

கழகத்தின் நிதிக்குழுவின் தவிசாளர் எம். யுஸ்ரி அணியின் தலைவர் சிபாரிடம் முதலாவது ஸ்டிக்கரினை கையளித்து வெளியீட்டினை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் கழக தலைவர் பஜான், பயிற்றுவிப்பாளர் ரூமி ஹபீபி, ஒழுக்காற்றுக்குழு தவிசாளர் சர்பான், அங்கத்தவர்களான நூருல்லாஹ், நவ்சாத், அஸ்கர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

புத்தளம் தினகரன் நிருபர்

Tue, 12/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை