சட்டவிரோதமாக சிகரெட் கடத்திய 33 வயதானவர் கைது

சட்டவிரோதமாக சிகரெட் கடத்திய 33 வயதானவர் கைது-Illegal Cigarette-Sri Lankan Arrested at BIA-Customs

சுமார் ரூ. 11 இலட்சம் பெறுமதி

சட்டவிரோதமாக இலங்கைக்கு சிகரெட் கொண்டு வந்த நபரொருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (08) அதிகாலை 5.30 மணியளவில், FZ 548 எனும் விமானத்தில் துபாயிலிருந்து வந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள அத்தியட்சகர் லால் வீரகோன் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக சிகரெட் கடத்திய 33 வயதானவர் கைது-Illegal Cigarette-Sri Lankan Arrested at BIA-Customs

இதன்போது, குறித்த நபரிடமிருந்து 91 கார்ட்டன் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, அதன் பெறுமதிய ரூபா 10 இலட்சத்து 92 ஆயிரம் (ரூ. 1,092,000) என மதிப்பிடப்பட்டுள்ளது.

அவற்றை அவரது பயணப் பொதியில் மறைத்து வைத்து எடுத்துவர முயன்ற நிலையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான சுங்க விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Sun, 12/08/2019 - 13:30


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக