விருந்துபசாரத்தில் உணவு உண்ட 30 பேர் வைத்தியசாலையில்

தெமோதரயில் சம்பவம்

விசேட விருந்துபசார வைபவமொன்றில் உணவு ஒவ்வாததன் காரணமாக எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமோதர தோட்டத்தில் சிறுமி உட்பட 30 பேர் தெமோதர பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

தெமோதர தோட்டத்தில் தோட்ட தொழிற்சாலையில் கடந்த திங்கட்கிழமை (23) இரவு இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட அத்தோட்டத்தின் மக்களில் சிறுமி அடங்களாக ஆண்களும், பெண்களும் உணவு உட்கொண்டுள்ளனர்.

இதன்போது வழங்கப்பட்ட உணவு ஒவ்வாதமை காரணமாக வயிற்றோட்டம் மற்றும் வாந்தி ஏற்பட்டதன் காரணமாக நேற்று (30) காலை தெமோதர பிரதேச மற்றும் பதுளை மாவட்ட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஒரே குடும்பங்களையும், வெவ்வேறு குடும்பங்களையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(ஹற்றன் சுழற்சி நிருபர்)

Tue, 12/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை