ஒமர் அல் பஷீரூக்கு 2 ஆண்டுகள் சிறை

ஊழல் மற்றும் சட்டவிரோத பணப் பரிவார்த்தனை குற்றங்களுக்காக சூடான் முன்னாள் ஜனாதிபதி ஒமர் அல் பஷீருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த வழக்கு தவிர, மேலும் பல ஊழல் வழக்குகளை அல் பஷீர் எதிர்கொண்டுள்ளார். இதுதவிர, கடந்த 2000ஆம் ஆண்டுகளில் சூடானின் டார்பூர் பகுதியில் அரபு இனத்தவரல்லாத ஆயிரக்கணக்கான பொதுமக்களை கொன்று குவித்ததாக, நெதர்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள ஐ.நா குற்றவியல் நீதிமன்றத்தில் அல்-பஷீர் மீது போர்க் குற்ற வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சூடானில் கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சி செலுத்தி வந்த அல் பஷீர், மக்கள் போராட்டம் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் பதவி விலகினார்.

Mon, 12/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை