289 நாள் விண்வெளியில் பயணித்து பெண் சாதனை

உலகில் மிக அதிக காலம் விண்வெளியில் பயணம் செய்த பெண் என்ற சாதனையை அமெரிக்க விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கூக் படைத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று இந்தச் சாதனை படைக்கப்பட்டது. கிறிஸ்டினா சர்வதேச விண்வெளி நிலையத்தில் 289 நாட்கள் இருந்தார்.

இதற்கு முன் இதே சாதனையைப் படைத்திருந்த பெகி விட்சனை விடவும், இது ஒரு நாள் அதிகமாகும். கிறிஸ்டினா, பெப்ரவரி வரை விண்வெளியில் பயணம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்தது.

இதுவரை அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள், விண்வெளியில் மேற்கொண்டுள்ள மிக நீண்ட பயணமாக ஸ்கொட் கெல்லியின் 340 நாள் பயணம் பதிவாகியுள்ளது.

Tue, 12/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை