இலங்கை அணி 271 ஓட்டங்கள்

பாகிஸ்தானுடனான 2 ஆவது டெஸ்ட்:

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டையும் இழந்து 271 ஓட்டங்களை பெற்றது.

முதல் நாள் ஆட்டநேர நிறைவில் இலங்கை அணி 64 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இலங்கையின் துடுப்பாட்ட வீரர்களான மெத்திவ்ஸ் -எம்புல் தெனிய ஜோடி இருவரும் நேற்று ஆட வந்த நிலையில் எம்புல் தெனிய 13 ஓட்டங்கள் பெற்று இன்றைய முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்து சென்றார்.

பின்னர் மெத்திவ்ஸ் அவரும் வந்த வேகத்தில் 13 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க இலங்கை அணி சற்று தடுமாறிக் காணபபட்டது.பின்னர் தனஞ்சய டி சில்வா மற்றும் தினேஸ் சந்திமால் இருவரும் நன்றாக நிலைத்து நின்று ஆடுவார்கள் என்ற நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டியில் சதம் பெற்ற தனஞ்சய இந்த ஆட்டத்தில் 32 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

இலங்கை அணிக்காக பல நாள் இடை வெளிக்கு பிறகு சந்திமால் தனது அரைச்சதத்தை பெற்று 74 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார்.பின்னர் திக்வெல்ல 21 ஓட்டங்களையும் அத்துடன் இங்கு முக்கிய விடயம் என்ன வென்றால் டில்ருவன் பெரேரா அரைச்சதம் பெறுவார் என்ற நிலையில் 48 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.குமார 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கவில்லை.பாகிஸ்தான் அணியை விட 80 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது இலங்கை அணி.

பாகிஸ்தான் அணி சார்பாக பந்துவீச்சில் சஹீன் ஷா அப்ரிடி 77 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டையும் அப்பாஸ் 55 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டையும் சுகையில் 11 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் பதம் பார்த்தனர். அத்துடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான சான் மசூட் -அபிட் அலி இருவரும் முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 57 ஓட்டங்களை குவித்தனர்.

மசூட் 21 ஓட்டங்களுடனும் ஆபில் அலி 32 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடையும் போது பாகிஸ்தான் அணி 57 ஓட்டங்களை பெற்றது.இன்று போட்டியின் மூன்றாவது நாளாகும்.

Sat, 12/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை