யூடியுபில் 26 மில். டொலரை ஈட்டிய எட்டு வயது சிறுவன்

விளையாட்டுப் பொருட்களை விமர்சனம் செய்து வீடியோக்களை வெளியிடும் எட்டு வயது சிறுவன் ரயன் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாகவும் யூடியுப் சமூகதளத்தின் மூலம் அதிக பணம் சம்பாதிப்பவனாக பதிவாகியுள்ளான்.

‘ரயான்ஸ் வேர்ல்ட்’ என்ற நிகழ்ச்சியை வெளியிடும் இந்த சிறுவன் 2019 ஆம் ஆண்டில் 26 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளான். கடந்த ஆண்டில் இந்த சிறுவன் 22 மில்லியன் டொலர்களை ஈட்டியமை குறிப்பிடத்தக்கது.

சுமார் 23 மில்லியன் ரசிகர்களைக் கொண்ட இந்த சிறுவன், போபஸ் சஞ்சிகை வெளியிட்ட தகவலின்படி, மிக அதிகச் சம்பளம் ஈட்டும் யூடியுப் நட்சத்திரங்களில் முதல் நிலையைப் பிடித்துள்ளான்.

இந்தப் பட்டியிலில் “டுட் பேர்பெக்ட்” என்னும் யூடியுப் கணக்கு இரண்டாம் இடத்தையும் “நாஸ்ட்யா” என்னும் கணக்கு மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

Fri, 12/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை