வெள்ளம், மண்சரிவினால் 240 பேர் இடம்பெயர்வு

பதுளை மாவட்டத்தில்

மண்சரிவு அபாயமுள்ள  பிரதேசத்தில் 10 வருட வாழ்வு

பதுளை மாவட்ட அப்புத்தளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் பெய்து வரும் கடும் மழையினால் இதுவரை 240 பேர் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

காகல்ல தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 56 குடும்பங்களை சேர்ந்த 240 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இவ்வாறு இடம்பெயர்ந்த 240 பேர் தற்காலிகமாக அப்புத்தளை காகல்ல தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான உலர் உணவு பொருட்கள் அப்புத்தளை பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.

இப்பிரதேச மக்கள் சுமார் 10 வருடகாலமாக மண்சரிவு அபாயமுள்ள பிரதேசத்திலேயே வசித்துவருவதாகவும், மழை காலங்களில் மாத்திரம் முகாம்களுக்கு செல்வதும், பின்னர் காலநிலை வழமைக்கு திரும்பியவுடன், வீடுகளுக்கு செல்வதையும் வழமையாக கொண்டு வந்துள்ளனர்.

எனவே பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களை முன்னாள் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் நேரில் சென்று பார்வையிட்டதுடன், இவர்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்களையும் வழங்கியுள்ளார்.

(ஹற்றன் சுழற்சி நிருபர்)

Wed, 12/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை