24 ஆவது அரேபியன் கல்ப் கிண்ண உதைபந்தாட்ட போட்டி கட்டார் - சவூதி, பஹ்ரைன்-ஈராக் அரையிறுதியில் பலப்பரீட்சை

ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கும் கட்டார் அணிக்கு இடையே நடைபெற்ற போட்டியில் கட்டார் 4- – 2 என அதிர்ச்சி வெற்றியீட்டி சவூதி அரேபிய அணியுடனான அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது. கட்டாரில் நடைபெற்று வரும் 24 ஆவது அரேபியன் கல்ப் கிண்ண போட்டி நேற்று முன்தினம் கட்டார் கலிபா மைதானத்தில் 43 ஆயிரத்துக்கும் அதிகளவான ரசிகர்கள் கண்டுகளித்த இந்த போட்டியை நடத்தும் நாடான கட்டார் வென்றது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கட்டார் அணி ஆசிய போட்டியில் வெற்றியீட்டியதும் குறிப்பிடத்தக்கது.இரு அணிகளுக்குமிடையேயான ஆட்டம் நாளை வியாழக்கிழமை கலிபா மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இதேவேளை சவூதி அணி கடந்த திங்கட் கிழமை ஓமான் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 3- – 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றியீட்டியதும் குறிப்பிடத்தக்கது. மற்றொரு அரையிறுதி ஆட்டம் நாளை வியாழக்கிழமை ஈராக் மற்றும் பஹ்ரைன் அணிகள் மோதவுள்ளமை விசேட அம்சமாகும். எட்டு நாடுகள் பங்கேற்கும் இந்த உதைபந்தாட்டத் தொடரில் கட்டார் நடத்தும் 4 ஆவது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Wed, 12/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை