தேவாலயத்தில் நச்சு கசிவு: 21 பேர் மருத்துவமனையில்

பிரான்ஸில் கிறிஸ்மஸ் கூட்டுப் பிரார்த்தனையின்போது ஏற்பட்ட கார்பன் மோனொக்சைட் நச்சுவாயுக் கசிவினால் பாதிக்கப்பட்ட 21பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். 

கார்ல்போர்ன் நகரில் உள்ள தேவாலயத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. கூட்டுப் பிராத்தனைக்குச் சென்ற சிலர் தலைவலி ஏற்பட்டதாகக் கூறியதைத் தொடர்ந்து அவசரப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் தேவாலயத்திற்கு விரைந்தனர். 

தேவாலயத்தில் உள்ளவர்கள் அருகில் உள்ள சமூக அரங்கத்திற்கு வெளியேற்றப்பட்டனர். 

அங்கு 72பேருக்குச் சிகிச்சை வழங்கப்பட்டது. அவர்களில் 19பேர் அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். 

நச்சுவாயுக் கசிவுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. வெப்பச் சாதனக் கருவியால் நச்சுவாயுக் கசிவு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று புலனாய்வாளர்கள் கருதுகின்றனர்.   

Fri, 12/27/2019 - 11:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை