அல்-மக்கியா பழைய மாணவர் கிரிக்கெட் போட்டியில் 2009 அணி வெற்றி

இரத்தினபுரி இ/அல் மக்கியா முஸ்லிம் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பழைய மாணவர் கிரிக்கட் அணிகளுக் கிடையிலான கிரிக்கட் சுற்றுப் போட்டியில் இப்பாடசாலையின் 2009 ஆம் ஆண்டு பழைய மாணவர் அணி வெற்றி பெற்றது.

இரத்தினபுரி சீவலீ விளையாட்டரங்கில் அண்மையில் இடம் பெற்ற இப் போட்டிகளின் போது இதன் 2015, 2011, 2009, 2006, 2004, 2001, 1994 ஆகிய ஆண்டுகளில் க.பொ.த.சாதாரண தர வகுப்புக்களில் கல்வி கற்ற 8 அணிகள் பங்கேற்றன. பரிசளிப்பு நிகழ்வின் பிரதம விருந்தினராக இரத்தினபுரி 3 பிரதேச பொலிஸ் உத்தியோகத்தர் வை.எம்.யாபா மற்றும் பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். மில்ஹான் உட்பட ஆசிரியர்கள் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இறுதிப்போட்டிக்கு 2004 மற்றும் 2009ஆம் ஆண்டு அணிகள் தெரிவான போதிதிலும் 2009 ஆம் ஆண்டு பழைய மாணவர் அணியின்ரே வெற்றியீட்டினர். கடந்த வருடம் 2004 ஆம் ஆண்டு அணி சம்பியன் பட்டத்தை வென்றமை குறிப்பிட த்தக்கதாகும். இப்போட்டியில் சிறந்த வீரருக்கான விருதை 2009 ம் ஆண்டு அணியின் கே.வசந்தராஜா பெற்றுக்கொண்டார். சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதினை 2004 ம் ஆண்டு அணியின் மொகமட் இர்ஷாட் பெற்றுக் கொண்டார்.சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதை 2009 ம் ஆண்டு அணியின் எம்.முபீன் பெற்றுக்கொண்டார். இறுதிச் சுற்றின் சிறந்த வீரருக்கான விருதை 2009 ம் ஆண்டு அணியின் எஸ். சிவா பெற்றுக்கொண்டார்.

இப்பாடசாலை அதிபர் எம். எஸ். எம். மில்ஹான் பழைய மாணவர் சங்க செயலாளர் எம்.எம். எம்.நுஸ்ஸாக் மற்றும் முக்கியஸ்தர்களின் பங்களிப்புடன் இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இப்போட்டியின் மூலம் கிடைக்கும் நிதி பாடசாலையின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர்.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)

Tue, 12/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை