இலங்கை மின்சார சபைக்கு 20,000 கோடி ரூபா கடன் சுமை

20ஆயிரம் ரூபா  கோடி ரூபா கடன் சுமையில் சிக்கியுள்ள இலங்கை மின்சார சபையை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர மின்சார சபையின் புதிய தலைவருக்கு ஆலோசனை வழங்கினார்.

மின்சார சபையின் தலைவராக பொறியியலாளர் விஜித ஹேரத்துக்கு நியமன கடிதம் வழங்கும் போதே அமைச்சர் இவ் ஆலோசனையை வழங்கினார்.

இலங்கை மின்சார சபை இவ் வருடம் 8500கோடி ரூபா நட்டமடைந்துள்ளது. அத்துடன் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு மின்சார சபை 8,200கோடி ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது. மேலும் தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து மின்சாரத்தை பெற்றுக் கொண்டமைக்காக 4,300கோடி ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது.

அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் எண்ணக் கருவுக்கமைய இயற்கை எரிசக்திக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்குடன் கடந்த 5 ஆண்டுகளாக முடங்கிப் போய்க் கிடந்த சூரிய சக்தி மின் உற்பத்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி முன்னுரிமையளித்து நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

Sat, 12/21/2019 - 09:27


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை