ஜீ 20 அமைப்பின் தலைமையை பொறுப்பேற்றது சவூதிஅரேபியா

அடுத்த வருடம் நவம்பர் ரியாதில் மாநாடு

சர்வதேச அமைப்புக்கள் அதிருப்தி

ஜீ 20 நாடுகளின் தலைமைப் பதவி சவூதி அரேபியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.ஜப்பானிடமிருந்து இத்தலைமை பதவியைப் நேற்று (01) பொறுப்பேற்ற சவூதிஅரேபியா அடுத்தவருடம் நவம்பர் 21,22 ஆம் திகதிகளில் இதற்கான மாநாட்டை நடத்தவுள்ளது.தலைநகர் ரியாதில் நடைபெறும் இம்மாநாட்டில் வளர்ச்சியடைந்த நாடுகள் பங்கு பற்றவுள்ளன.இந்த மாநாட்டையொட்டிய நூறு விஷேட வைபங்களையும் சவூதிஅரேபியா நடாத்தவுள்ளது. வரலாற்றில் அரபு நாடு ஒன்றுக்கு ஜீ 20 அமைப்பின் தலைமைப்பதவி வழங்கப் பட்டுள்ளமை இதுவே முதற்தடவைாகும்.பழமைபேணும் நாடான சவூதி அரேபியாவில் கடுமையான கட்டுப்பாடுகள் நிலவுகின்றன.சவூதியின் நடத்தைகள் தொடர்பில் சர்வதேச அளவில் பல்வேறு விமர்சனங்கள் உள்ள நிலையிலும் ஜீ 20 தலைமைப் பதவியை சவூதி அரேபியா பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் சில விடயங்களில் ஜீ 20 அங்கத்துவ நாடுகள் சவூதி அரேபியாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

பெண்கள் தொடர்பான உரிமைகள், ஊடகவியலாளர்கள், சுதந்திர செயற்பாட்டாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தடைகளை அகற்றுவதற்கான அழுத்தங்களும் பிரயோகிக்கப்படலாமென அவதானிகள் கூறுகின்றனர்.

பெண்கள் வாக்களிக்கும் உரிமைகள், வாகனம் ஓட்டுவதற்கான உரிமை, வெளியிடங்களில் நடமாடும் சம சந்தர்ப்பங்களை சவூதிஅ ரேபியா வழங்க வேண்டுமென்ற அழுத்தங்கள் நீண்டகாலமாக நிலவி வரும் நிலையில்,சில விடயங்களை அண்மைக் காலமாக சவூதிஅரேபியா தளர்த்தியமை தெரிந்ததே. மேலும் மிக நீண்டகாலமாகத் தொடரும் மன்னராட்சியை விடுவித்து ஜனநாயக தேர்தல் முறைக்குத் திரும்ப வேண்டுமெனக் குரல் கொடுக்கும் பலரை சவூதி அரசாங்கம் கைது செய்து,சிறையில் அடைத்து வைத்துள்ளமையும் பெரும் விமர்சனங்களாகி, சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.மேலும் சவூதிஅரேபியாவின் முடியாட்சிக்கு எதிராகக் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வைந்த சிரேலஷ்ட ஊடகவியலாளர் ஜமால் கஷோகி துருக்கியில் கொல்லப்பட்டதில் சர்வதேசத்தின் சந்கேம் சவூதிஅரேபியாவின் பக்கமே திரும்பியிருந்தது. இந்நிலையில் ஜீ 20 அமைப்பின் தலைமையைப் பொறுப்பேற்ற சவூதி அரேபியா இச்சந்தேகங்களைப் போக்க வேண்டிய கடப்பாடுகளுக்குள் வந்துள்ளதாகவும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.ஜீ 20 அமைப்பின் தலைமையைப் பொறுப்பேற்றது பற்றிக் கருத்து தெரிவித்த சவூதி அரேபியாவின் முடிகுரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான்: சர்வதேசத்தின் எதிர்பார்ப்புகளுக்கு

இணங்கிச் செல்லும் வகையில் பல்வகைத் தன்மையுன் கூடிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகத் தெரிவித்தார்.விஞ்ஞான ரீதியான அபிவிருத்தி,சர்வதேச சவால்கள்,பிறப்பு ,இறப்புவீதம்,காலநிலை மாற்றம், அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவு, முதியோரைப் பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு சவால்களை வழிநடத்திச் செல்வதற்கான ஆலோசனைகளை அமைப்பின் தலைவர் என்ற வகையில் சவூதிஅரேபியா முன்னெடுத்துச் செல்லவுள்ளது.மனித உரிமை செயற்பாடுகளுக்கு சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள சவூதி போன்ற நாடுகளிடம் ஜீ 20 அமைப்பின் தலைமைப் பதவிகள் வழங்கப்பட்டதை பல அமைப்புக்களும் கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.எனினும் இவ்வாறான விமர்சனங்களுக்கு மத்தியிலும் அமெரிக்காவுடன் நெருங்கிய நட்பைப் பேணும் நாடாக சவூதி அரேபியாவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இயற்கையாக இங்கு கிடைக்கும் எண்ணெய் வளம் பல நாடுகளை சவூதிஅரேபியாவின் நண்பர்ளாக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Mon, 12/02/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக