1st Test; SLvPAK: இலங்கை 308/6 ஆட்டத்தை இடைநிறுத்தியது

1st Test; SLvPAK: இலங்கை 308/6 ஆட்டத்தை இடைநிறுத்தியது-1st Test-SLvPAK-Dhananjaya de Silva-Rawalpindi

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் ராவல்பிண்டியில் இடம்பெற்று வரும் ICC டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியின் முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 308 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்தியுள்ளது.

சிறப்பாக விளையாடிய தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காது 102 ஓட்டங்களை பெற்றார்.
அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன 59 ஒட்டங்களையும், ஓஷத பெனாண்டோ 40 ஓட்டங்களையும், அஞ்சலோ மெத்திவ்ஸ் 31 ஒட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில், ஸஹீன் அப்ரிடி, நஸீம் ஷாஹ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு, உஸ்மான் ஷின்வாரி, மொஹமட் அப்பாஸ் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் அணி சற்று முன்னர் வரை ஒரு விக்கெட் இழப்பிற்கு 56 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஷான் மசூத் எவ்வித ஓட்டங்களையும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தார். ஆபித் அலி 32 ஒட்டங்களையும், அஷார் அலி 22 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

கடந்த நான்கு நாளாக இடம்பெற்று வரும் இப்போட்டி மழையின் குறுக்கீடு காரணமாக பாதிப்பை எதிர்கொண்டிருந்தது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. முதல் நாளில் 68.1 ஓவர்கள் பந்துவீசப்பட்டபோதும் மழை காரணமாக, இரண்டாம் நாளில் 18 ஓவர்களும், மூன்றாம் நாளில் 5 ஓவர்களும் வீசப்பட்டதோடு. நேற்றைய (14) நான்காம் நாள் ஆட்டம் எவ்வித ஓவர்களும் வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டிருந்தது.

இன்று (15) போட்டியின் இறுதி நாளாகும்.

இலங்கை 308/6d
தனஞ்சய டி சில்வா 102 (166)*
திமுத் கருணாரத்ன 59 (110)
ஓஷத பெனாண்டோ 40 (81)
அஞ்சலோ மெத்திவ்ஸ் 31 (77)

ஸஹீன் அப்ரிடி 2/58 (22.0)
நஸீம் ஷாஹ் 2/92 (27.0)
உஸ்மான் ஷின்வாரி 1/54 (15.0)
மொஹமட் அப்பாஸ் 1/72 (27.0)

பாகிஸ்தான் 56/1 (20.0)
ஆபித் அலி 32 (62)
அஷார் அலி 22 (48)
ஷான் மசூத் 0 (12

Sun, 12/15/2019 - 13:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை