பாக். 191 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை 3/64 ஓட்டங்கள்

இலங்கை - பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்ட்:

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சகல விக்கெட்டையும் இழந்து 191 ஓட்டங்களை குவித்தது பாகிஸ்தான் அணி.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று கராச்சி மைதானத்தில் ஆரம்பமானது.இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் தலைவர் தனது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என்பதற்கு அமைய அவ்வணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக சான் மசூட் மற்றும் ஆபிட் அலி இருவரும் களமிறங்கி பாகிஸ்தான் அணிக்காக நல்லதொரு இணைப்பாட்டத்தை வழங்குவார்கள் என்ற நிலையில் மசூட் 5 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார்.பின்னர் அலியுடன் இணைந்தார் அசார் அலி அவரும் வந்த வேகத்தில் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழக்க அவ்வணி ஒரு கட்டத்தில் ஓட்டம் பெற தடுமாறியது.பின்னர் பாபர் அசாம் இணைந்து ஆடிய வேளையில் அலி 38 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார். பாகிஸ்தான் அணி சார்பாக பாபர் அசாம் 60 ஓட்டங்களையும் ஆசாட் சபீக் 63 ஓட்டங்களையும் ஹரீஸ் சுகையில் 9 ஓட்டங்களையும் முகம்மட் றிஸ்வான் 4 ஓட்டங்களையும் யாஸீர் ஷா ஓட்டம் எதுவும் பெறாமலும் அப்பாஸ் ஓட்டம் எதுவும் பெறாமலும் சஹீன் ஷா அப்ரிடி 5 ஓட்டங்களுடனும் நசிம் ஷா 1 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பாகிஸ்தான் அணி 59.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டையும் இழந்து 191 ஓட்டங்களை முதல் இன்னிங்ஸிற்காக பெற்றது.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக குமார 49 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டையும எம்புல்தெனிய 71 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டையும் விஷ்வா பெர்னாண்டோ 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.

இதேவேளை நேற்று தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 64 ஓட்டங்களை குவித்துள்ளது.இலங்கை அணி சார்பாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ஓசத பெர்னாண்டோ 4 ஓட்டங்களுக்கு சஹீன் ஷாவின் பந்தில் ஆட்டமிழந்தார்.

பின்னர் கருணாரத்தவுடன் இணைந்தார் குசல் மென்டிஸ் அவரும் 13 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார்.பின்னர் அணியின் தலைவர் அவரும் 25 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார்.பின்னர் அஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் லசித் எம்புல்தெனிய இருவரும் முறையே 8,3 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக அப்பாஸ் இரு விக்கெட்டையும் சஹீன் ஷா அப்ரிடி ஒரு விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.இலங்கை அணி பாகிஸ்தான் அணியை விட 127 ஓட்டங்களும் 7 விக்கெட் பின்தங்கிய நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளும் ஆடிய முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி சார்பாக தனஞ்சய டி சில்வாவும் பாகிஸ்தான் அணி சார்பாக ஆபிட் அலியும் சதம் குவித்திருந்தமை விசேட அம்சமாகும்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டதுடன், போட்டி சமனிலையில் முடிவடைந்தது. இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடரை தீர்மானிக்கும் போட்டியாக அமையவுள்ளது.

போட்டிக்கான அணியின் மாற்றங்களை பொறுத்தவரை, இலங்கை அணியானது ஒரு மாற்றத்தை மேற்கொண்டது. கசுன் ராஜிதவுக்கு பதிலாக லசித் எம்புல்தெனிய அணியில் இணைக்கப்பட்டார்.

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை, உஸ்மான் ஷின்வாரிக்கு பதிலாக யசீர் ஷா அணிக்குள் அழைக்கப்பட்டார்.

இன்று போட்டியின் இரண்டாவது நாளாகும்.

Fri, 12/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை