1,700 தொன் பள்ளிவாசல் வேறு இடத்திற்கு மாற்றம்

துருக்கி நாட்டில் 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பள்ளிவாசல் ஒன்று வேறு இடத்தில் நிர்மாணிக்கப்படுவதற்காக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. டைக்ரிஸ் நதி பகுதியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட லிசு அணைக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் அணையை சுற்றியுள்ள 12 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஹசான்கேய்ப் உள்ளிட்ட பகுதிகள் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக எரி ரிஸ்க் பள்ளிவாசல் பெயர்த்து எடுக்கப்பட்டு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது.

1,700 தொன் எடை கொண்ட இந்தப் பள்ளிவாசல் கட்டடம் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட வாகனத்தில் 4 கிலோமீற்றர் எடுத்துச் செல்லப்பட்டு அது புதிதாக வைக்கப்படும் டைக்ரிஸ் நதிக்கரை நகரில் நிறுவப்பட்டது.

அய்யூபித் ஆட்சியாளர் இபுல் மெபாஹிர் சுலைமானின் உத்தரவின் பேரில் 1409 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்தப் பள்ளிவாசலின் குவிவிமாடம் வேறாக எடுத்துச் செல்லப்பட்டது.

Wed, 12/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை