மண்சரிவிலிருந்து 15 பேர் தெய்வாதீனமாக தப்பினர்

மண்சரிவிலிருந்து 15 பேர் தெய்வாதீனமாக தப்பினர்-Landslide Ampitikanda Estate-15 Escaped from Disaster

பண்டாரவளையில் மண்சரிவில் சிக்சிய இரு பெண்கள் கவலைக்கிடம்

அம்பிட்டிகந்த பெருந்தோட்டக் குடியிருப்புத் தொகுதியில்  குடியிறுப்பு ஒன்றின் மீது மண்மேடு சரிந்ததில், அங்கிருந்த 15 பேர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

மண்சரிவிலிருந்து 15 பேர் தெய்வாதீனமாக தப்பினர்-Landslide Ampitikanda Estate-15 Escaped from Disaster

ஹல்துமுல்ல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட, அம்பிட்டிகந்த பெருந்தோட்டத்தில் நேற்றிரவு இவ்வாறு மண்மேடு சரிவு இடம்பெற்றுள்ளது.

அதைத் தொடர்ந்து ஏனைய குடியிறுப்பு தொகுதியின் 28 குடும்பத்தினர் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, மாகந்தை தேயிலைத் தொழிற்சாலையில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மண்சரிவிலிருந்து 15 பேர் தெய்வாதீனமாக தப்பினர்-Landslide Ampitikanda Estate-15 Escaped from Disaster

அக்குடியிருப்பில் 15 பேர் இணைந்து ஏற்கனவே இறந்த தாயொருவரின் 30ஆவது தின கருமகிரியை நிகழ்வினை மேற்கொண்டிருந்த வேளையிலேயே . எதிர்பாராத விதமாக குடியிருப்பின் பின்னால் உள்ள மண்மேடு சரிந்துள்ளது. இச்சந்தர்ப்பத்தில் அங்கு கருமக்கிரியைகளில் ஈடுப்பட்டிருந்த 15 பேரும் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.

மண்சரிவிலிருந்து 15 பேர் தெய்வாதீனமாக தப்பினர்-Landslide Ampitikanda Estate-15 Escaped from Disaster

மாக்கந்தை தேயிலைத் தொழிற்சாலையில் தங்கவைக்கப்பட்டிருக்கும் 28 குடும்பத்தினரை கொண்ட 91 பேருக்குமான நிவராண உதவிகளை, ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் வழங்கியுள்ளார். உலர் உணவு பொருட்களும் இவர்களுக்கு  வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் இடர் முகாமைத்துவ நிலைய பிரதிப்பணிப்பாளர்  பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

மண்சரிவிலிருந்து 15 பேர் தெய்வாதீனமாக தப்பினர்-Landslide Ampitikanda Estate-15 Escaped from Disaster

மண்சரிவிலிருந்து 15 பேர் தெய்வாதீனமாக தப்பினர்-Landslide Ampitikanda Estate-15 Escaped from Disaster

பண்டாரவளை மண் சரிவில் இரு பெண்கள்ஆபத்தான நிலையில்
அத்துடன் பண்டராவளை ஆலய வீதியில் இன்று (01) முற்பகல் மண் மேடு  சரிந்து வீழ்ந்ததில் இரு பெண்கள்  மண்சரிவில் சிக்குண்டனர். இதையடுத்து  அங்கு கூடியவர்கள்  உடனடியாக சரிந்த மண்னை அப்புறப்படுத்தி, குறித்த இரு பெண்களையும் மீட்டனர்.

அவர்கள் உடனடியாக தியத்தலாவை அரசினர் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.  இவ்விருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

22 வயது நிரம்பிய இளபெண்ணொருவரும், 45 வயது நிரம்பிய பெண்ணும் ஒருவருமே இவ்வாறு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைபெற்று வருகின்றனர்.

(பதுளை தினகரன் விசேட நிருபர் - எம். செல்வராஜா)

Sun, 12/01/2019 - 12:54

from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை