கடற்படையின் 13 அவசர உதவி குழுக்கள் களத்தில்

கடற்படையின் 13 அவசர உதவி குழுக்கள் களத்தில்-Flood-Sri Lanka Navy in Action-13 Rescue Team With 15 Boards

சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினர் உதவி வழங்கி வருகின்றனர்.

அதற்கமைய பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளில், 13 கடற்படை நிவாரண குழுக்கள் மற்றும் 15 சிறிய படகுகள் என்பன ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடற்படையின் 13 அவசர உதவி குழுக்கள் களத்தில்-Flood-Sri Lanka Navy in Action-13 Rescue Team With 15 Boards

தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வாவின் ஆலோசனையின் பேரில், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அவசர உதவி குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக, கடற்படை அறிவித்துள்ளது .

கடற்படையின் 13 அவசர உதவி குழுக்கள் களத்தில்-Flood-Sri Lanka Navy in Action-13 Rescue Team With 15 Boards

அதன்படி, நவகத்தேகம, சாலியா வெவ, எளுவன்குளம்பகுதிக்கு, வடமேற்கு கடற்படை கட்டளையின் 03 நிவாரண குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

பொலன்னறுவை, கிரான், புனானை பகுதிகளுக்கு, கிழக்கு கட்டளையின் 04 நிவாரண குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

கால்நேவ, தம்புத்தேகம, இபலோகம ஆகிய பிரதேசங்களுக்கு, வட மத்திய கடற்படை கட்டளையின் 04 நிவாரண குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

கடற்படையின் 13 அவசர உதவி குழுக்கள் களத்தில்-Flood-Sri Lanka Navy in Action-13 Rescue Team With 15 Boards

செல்ல கதிர்காமத்திற்கு, தெற்கு கடற்படை கட்டளையின் ஒரு நிவாரண குழுவு அனுப்பப்பட்டுள்ளன,

தென்கிழக்கு கடற்படை கட்டளையின் நிவாரண குழுவொன்று பாணமை பிரதேசத்திலும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் உள்ளிட்ட நிவாரண பணிகளில் குறித்த குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக கடற்படை தலைமையகம் அறிவித்துள்ளது.

கடற்படையின் 13 அவசர உதவி குழுக்கள் களத்தில்-Flood-Sri Lanka Navy in Action-13 Rescue Team With 15 Boards

கடற்படையின் 13 அவசர உதவி குழுக்கள் களத்தில்-Flood-Sri Lanka Navy in Action-13 Rescue Team With 15 Boards

Sun, 12/22/2019 - 14:15

from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை