ஊடக விருது விழாவில் லேக் ஹவுஸிற்கு 11விருதுகள்

பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் 20ஆவது சிறப்பு ஊடக விருது விழாவில் லேக்ஹவுஸ்  நிறுவனத்திற்கு 11விருதுகள் கிடைத்துள்ளன. இந்த விழா கல்கிசை ஹோட்டலில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது.

இதன்    ​போது  சிறந்த  சுற்றாடல் செய்தியாளருக்கான   விருது தினகரன் பிராந்திய நிருபர்  (கிளிநொச்சி குறூப்) முருகையா தமிழ்ச் செல்வனுக்கு கிடைத்தது.

டென்சில் பீரிஸ் இளம் செய்தியாளருக்கான   விருது சண்டே ஒப்சேவர் ஊடகவியலாளர் மந்திரா பபசராவுக்கு கிடைத்ததோடு சிறப்பு விருது ரச ஊடகவியலாளர் நிர்மணி யசரத்னவுக்கு கிடைத்தது.

சிறந்த இணையத்தள வடிவமைப்பிற்கான விருது தினமின இணையதளத்திற்கு வழங்கப்பட்டதோடு சிறந்த ஆங்கில இணைய வடிவமைப்பிற்கான விருதை டெய்லி நியூஸ் பெற்றுக்கொண்டது. இது தவிர சிறந்த விளையாட்டு செய்தியாளருக்கான சிறப்பு விருது தினமின ஊடகவியலாளர் பிரின்ஸ் குணசேகரவுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த வர்த்தக செய்தியாளர் சிறப்பு விருது சிலுமின தாரக்க விக்ரமசேகரவுக்கு கிடைத்ததோடு பேராசிரியர் கைலாசபதி சிறப்பு விருது ரச ஊடகவியலாளர் கசுன் புசேவெல்லவுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த சிங்கள பத்தி எழுத்துக்கான சிறப்பு விருது ரச ஊடகவியலாளர் சமந்தக பண்டாரவுக்கு கிடைத்துள்ளது.

தகவலறியும் சட்டத்தை பயன்படுத்தி எழுதப்பட்ட சிறந்த செய்தி மற்றும் கட்டுரைக்கான சிறப்பு விருது ரச ஊடகவியலாளர் சமந்த ஹெட்டியாரச்சிக்கு வழங்கப்பட்டது. சிறந்த சுற்றாடல் சிறப்பு விருதை சண்டே ஒப்சேவர் ஊடகவியலாளர் திமுத்து சதுரிக்கா பெற்றுக் கொண்டார்.

Thu, 12/12/2019 - 09:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை