100 பேருடன் பயணித்த விமானம் விபத்து

14 பேர் பலி, 35 பேர் காயம்

கசகஸ்தானில் சம்பவம்

கசகஸ்தான், அல்மாடி விமான நிலையத்துக்கு அருகே நேற்றுக் காலை இடம்பெற்ற விமான விபத்தில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 35 பயணிகள் காயமடைந்துள்ளனர். 5 விமான பணியாளர்கள் உட்பட 100 பேருடன் பயணித்த Bek Air Z92100 ரக கசகஸ்தான் விமானம் அல்மாடி விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு அருகேயுள்ள இரண்டு மாடி கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமானம் விபத்துக்குள்ளான மறுநிமிடமே பயணிகள் இடிபாடுகளுக்கிடையே புகுந்து வெளியே வந்து உயிர் தப்பினர். விமான நிலையத்தின் அவசர உதவிப் பிரிவும் ஸ்தலத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தது. விபத்து தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கசகஸ்தான் ஜனாதிபதி Kassym Jomart Tokajev, உயிரிழந்தவர்களுக்கான நட்ட ஈடுகள் வழங்கப்படுவதுடன் விபத்துக்கு காரணமானவர்களுக்கு தண்டனை வழங்கப்படுமென்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கென விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பெக் எயார் விமானம் கசகஸ்தானின் பாரிய நகரமான அல்மாடியிலிருந்து தலைநகரான நர்சுல்தான் நோக்கி பயணத்தை ஆரம்பித்திருந்தது. இவ்விபத்து கசகஸ்தான் நேரப்படி நேற்றுக் காலை 7.22 க்கு இடம்பெற்றுள்ளது.

 

Sat, 12/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை