10 ஆண்டுகளில் 400 டெஸ்ட் விக்கெட்: ஸ்டூவர்ட் பிராட் சாதனை

இந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுக்கள் வீழ்த்திய 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஸ்டூவர்ட் பிராட். இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென் ஆபிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

தென் ஆபிரிக்க- இங்கிலாந்து அணிகள் இடையேயான 4 டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. முதலில் விளையாடிய தென் ஆபிரிக்கா முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 277 ஓட்டங்கள் எடுத்து இருந்தது.

குயிண்டன் டி காக் அதிகபட்சமாக 95 ஒட்டங்கள் எடுத்தார். சாம் கர்ரன் 4 விக்கெட்டும் ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டும், அண்டர்சன், ஆர்சர் தலா 1 விக்கெட்டும். கைப்பற்றினார்கள்.

3 விக்கெட் கைப்பற்றியதன் மூலம் இங்கிலாந்து வேகப்பந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் புதிய சாதனை படைத்தார். அவர் கடந்த 10 ஆண்டுகளில் 400 டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார்.

400 விக்கெட்டை எடுத்த 2-வது வீரர் ஆவார். இங்கிலாந்தை சேர்ந்த மற்றொரு வேகப்பந்து வீரர் அண்டர்சன் 428 விக்கெட் எடுத்துள்ளார். ஸ்டூவர்ட் பிராட் 401 விக்கெட்டுடன் அதற்கு அடுத்த நிலையில் உள்ளார். நாதன் லயன் (அவுஸ்திரேலியா) 376 விக்கெட்டுடன் 3-வது இடத்திலும், ஹேரத் (இலங்கை) 363 விக்கெட்டுடன் 4-வது இடத்திலும், அஸ்வின் (இந்தியா) 362 விக்கெட்டுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.

Sat, 12/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை