கொழும்பு கழிவுப்பொருள் பிரச்சினைக்கு தீர்வு

கொழும்பு மாநகர சபை அதிகாரப் பிரதேசத்தில் ஒன்றுசேரும் கழிவுப்பொருள் பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட கெரவலபிடிய மின்சாரம் உற்பத்தி மையம் 2020 பெப்ரவரி மாதத்தில் ஆரம்பித்து வைக்கப்படும். இதன் மூலம் கொழும்பு வாழ் மக்களின் நீண்டகால கழிவுப்பொருள் அகற்றல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். இது இங்கு வாழ் மக்களின் முக்கியத்துவமிக்க நிகழ்வாகும் என கொழும்பு மேயர் ரோஸி சேனாநாரக தெரிவித்தார். இலங்கையில் நகரப்புற கழிவுப்பொருளின் மூலம் மின்சாரம் உற்பத்திக்கான கொழும்பின் கழிவுப் பொருள் மின்சாரத்துக்கான (colombo wase to Energy project) திட்டம் தொடர்பில் வெஸ்டர்ன் பவர் நிறுவனத்துடன் திருத்தப்பட்ட உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இந் நிகழ்வு மாநகர சபை குழுவறையில் மேயர் தலைமையில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் . இந்த வேலைத் திட்டத்தின் மூலம் பத்து மெகாவோட் மின்சாரம் வழங்கப்படுவதுடன் கொழும்பு நகரின் கழிவுப்பொருட்கள் இந்த நிறுவேனத்துக்கு இலவசமாக வழங்கப்படும்.இது நகரின் கழிவுப்பொருள் அகற்றுவதில் எதிர்நோக்கிய நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் சரித்திரபூர்வ நிகழ்வாக விளங்குகின்றது. எனது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதே தனது ஒரே நோக்கமாகும் எனவும் அவார் மேலும் தெரிவித்தார் . மேயர் ரோஸி சேனாநாரக மற்றும் வெஸ்டர்ன் பவர் நிறுவனத்தின் சார்பில் கலாநிதி பராக்கிரம திஸாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் ஒப்பந்தத்தில் கைப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இருதரப்பு பொறியிலாளர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பாணந்துறை மத்திய குறூப் நிருபர்

Mon, 11/11/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக