அவுஸ்திரேலிய காட்டு தீயால் மூவர் பலி: பலர் வெளியேற்றம்

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீயால் குறைந்தது மூவர் உயிரிழந்திருப்பதோடு ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நியூ செளத் வேல்ஸ் மற்றும் குவின்ஸ்லாந்து முழுவதும் 100க்கும் அதிகமான இடங்களில் தொடர்ந்து காட்டுத் தீ எரிந்த வண்ணம் இருக்கும் நிலையில், மூன்றாவது நாளாகவும் நேற்று அவசர நிலை நீடித்தது. இந்த இரு மாநிலங்களிலும் தீயை கட்டுப்படுத்த 1,300 தீயணைப்பு வீரர்கள் போராடி வரும் நிலையில் இராணுவம் அழைக்கப்படக் கூடும் என்று பிரதமர் ஸ்கொட் மொரிசன் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவி புரிவதற்கு நூற்றுக்கணக்கான மக்கள் முன்வந்துள்ளனர். கடுமையான வெப்பநிலை நீடிப்பதால் சிட்னிக்கு அருகாமையில் உள்ள பகுதிகள் உட்பட தீ மேலும் பரவும் ஆபத்து இருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

குவீன்ஸ்லாந்தில் வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் இரவை கழித்தனர். இந்த மாநிலத்தில் 150 க்கும் அதிகமான வீடுகள் தீயால் அழிந்துள்ளன.

Mon, 11/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை