பொத்துவில் மத்திய கல்லூரி மாணவன் அக்தருக்கு கௌரவம்

கல்வி அமைச்சு அண்மையில் நடாத்திய, அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் தேசிய மட்ட சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்ட பொத்துவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர் அணியின் வீரர் எம்.எஸ்.ஜே.அக்தர் இவ்வருடத்திற்கான சிறந்த வீரராகத் தெரிவு செய்யப்பட்டு, கல்வி அமைச்சினால் பணப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில், பொத்துவில் மத்திய கல்லூரி மாணவன் எம்.எஸ்.ஜே.அக்தர், அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டித் தொடரின் சிறந்த வீரருக்கான கௌரவத்தினைப் பெற்றுக் கொண்டார். இதன்போது மாணவன் அக்தர் ரூபா 20 ஆயிரம் பணப்பரிசினை பெற்றுக் கொண்டார்.

கிரியுள்ள விக்கிரமசீலா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில், பொத்துவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அணியினர், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய

கல்லூரி (தேசிய பாடசாலை) அணியினரை வெற்றி கொண்டு தேசிய சாதனையை நிலை நாட்டினர்.பொத்துவில் மத்திய கல்லூரி அணியினர் மொத்தமாக ஐந்து போட்டிகளில் வெற்றியீட்டி, இவ்வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டியமை குறிப்பிடத்தக்கது.சிறந்த வீரர் எம்.எஸ்.ஜே.அக்தர் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர் எம்.முகம்மட் அஸ்மி ஆகியோருக்கு கல்லூரி அதிபர் கே.ஹம்ஸா வாழ்த்து,பாராட்டுத் தெரிவித்துக் கொண்டார்.

(அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)

Thu, 11/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை