ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கோட்டாவை ஆதரிக்க முடிவு

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதென சமாதானக் கூட்டமைப்பின் அரசியல் உச்சபீடம் தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியதையடுத்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அக்கட்சியின் செயலாளரும் முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் செயலாளருமான ஹசனலி அறிவித்துள்ளார். அண்மையில் நடந்த கட்சியின் உயர்பீடத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இதுபற்றி ஹஸன்அலி தெரிவித்ததாவது:

சிறுபான்மை மக்களின் விசேடமாக முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகள் மற்றும் சமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி விரிவாகவும், ஆழமாகவும் ஆராயப்பட்டன. ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு சமர்ப்பித்திருந்த 13 அம்சக் கோரிக்கைகளுக்கு சாதகமாக, பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவித்திருந்தது.விரைவில் இருகட்சிகளுக்கும் இடையில் ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படும்.நாட்டின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பில்தான், சிறுபான்மை மக்களின் பாதுகாப்பும் உள்ளடங்கியுள்ளது.

இலங்கை முஸ்லிம்கள் புதிய அரசியல் விழிப்புணர்வை அடைய வேண்டியிருக்கிறது. அவ்வாறே 1980 களில் இனப்பிரச்சினை வன்முறை வடிவம் எடுத்தபோது முஸ்லிம்களின் அரசியல் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மறைந்த தவைர் அஷ்ரப் கவனத்தில் எடுத்து முஸ்லிம்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார். அதேபோல் 2009ம் ஆண்டு புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்த பின்னும் இலங்கை அரசியலில் பாரிய மாற்றம் ஏற்பட்டிருந்தது. இவ்வாறான எல்லாவிடயங்களையும் எமது கட்சி கவனத்தில் எடுத்துக்கொண்டே இம்முடிடிவை எடுத்தது

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், அன்றைய அரசியற் சூழ்நிலைகளுக்கு ஏற்ப புதிய தலைமைத்துவ வரவுக்கு சிறுபான்மை மக்களாகிய நாம், ஏகோபித்த ஆதரவை வழங்கியிருந்தோம். ஆனால் அந்த ஆதரவு சிறுபான்மை மக்களுக்கு ஒட்டுமொத்த ஏமாற்றத்தையும், தோல்வியையுமே தந்தது என்பதே வரலாறாகியுள்ளது. இந்த வரலாறுகளை மாற்றவே ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவுக்கு ஆதரவு வழங்குவதாகத் தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

 

Fri, 11/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை