டிரம்புக்கு ஆபாச சமிக்ஞை கட்டியவர் தேர்தலில் வெற்றி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு எதிராக நடுவிரலை காட்டியதாக அரசு பணியிலிருந்து நீக்கப்பட்ட பெண் லவுடன் கவுன்டி சபையின் கண்காணிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இரு குழந்தைகளின் தாயான ஜூலி பிரிஸ்க்மேன் என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டு, சைக்கிள் ஓட்டியபடி சென்றபோது அந்த வழியாக காரில் சென்ற ஜனாதிபதி டிரம்புக்கு நடுவிரலை காட்டியதாக கூறப்படுகிறது.

இந்த ஆபாச செயல் தொடர்பான புகைப்படம் வலைதளங்களில் பிரபலமடைந்ததை அடுத்து, அவர் சந்தைப்படுத்தல் துறை நிபுணர் என்ற அரசு பணியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் ஜனநாயக கட்சி அவருக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது.

அதன்படி விர்ஜீனியா மாநிலத்தில் இந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட அவர் 52 வீதம் வாக்குகள் பெற்று லவுடன் கவுன்டி சபையின் கண்காணிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Fri, 11/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை