கல்முனை அல் - மிஸ்பாஹ் மாணவர்கள் தேசிய மட்ட சதுரங்க விளையாட்டுப் போட்டிக்கு தெரிவு

இலங்கை தேசிய இளைஞர் சேவை சதுரங்க சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட மாவட்ட மட்ட சதுரங்கப் போட்டியில் கல்முனை அல்- மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் தேசிய மட்ட சதுரங்க விளையாட்டுப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் 11வயதின் கீழ் பிரிவில் பங்குபற்றிய எஸ்.எல்.எப்.தஸ்னி என்ற மாணவி இரண்டாமிடத்தையும் எம்.ஜே.ஐ. ஸஹ்மி என்ற மாணவன் மூன்றாமிடத்தையும் பெற்றதன் மூலம் தேசிய மட்டத்திற்க்கு தெரிவாகி பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர் .

பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக இப் போட்டிக்கு தேசிய மட்டத்துக்கு இவ் இரு மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இச் சதுரங்கப் போட்டிக்கு பாடசாலையில் இருந்து பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் கிண்ணங்கள் வழங்கப்பட்டன.

அவர்களை பயிற்றுவித்து ஊக்கமளித்த பாடசாலையின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களான எம்.முபித் மற்றும் ஏ.ஜே.எம்.சாபித் அவர்களுக்கு பாடசாலை அதிபர் ஏம்.ஐ. அப்துல் ரசாக், பிரதி அதிபர்காளான ஐ.எல்.ஏ. ஜின்னா, ஈ.றினோஸ் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

இத் தெரிவுப்போட்டி கடந்த சனிக்கிழமை 02.11.2019 கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையில் இடம்பெற்றமை குறிப்பிட்டத்தக்கது.

நெய்னாகாடு விசேட நிருபர்

Wed, 11/06/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக