சிகிச்சைக்காக லண்டனுக்கு பயணமானார் நவாஸ் ஷரீப்

கடும் உடல் நலக் குறைவால் அவதியுறும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் (69) சிகிச்சைக்காக லண்டனுக்கு விமான ஆம்புலன்ஸ் மூலம் நேற்று அழைத்துச் செல்லப்பட்டார்.

அவர் வெளிநாடு செல்ல அனுமதிப்பதற்கு பாக். நாணயப்படி ரூ.700 கோடி மதிப்பிலான உத்தரவாதப் பத்திரத்தை அளிக்க வேண்டும் என்ற அரசு விதித்த நிபந்தனையை லாகூர் உயர்நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து லண்டன் பயணமானார்.

இதுகுறித்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மரியம் ஒளரங்கசீப் கூறுகையில்,

லண்டனில் உள்ள ஹார்லி ஸ்ட்ரீட் மருத்துவமனையில் நவாஸுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. தேவைப்பட்டால் அமெரிக்காவின் பொஸ்டனில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட உள்ளார்.

லண்டன் புறப்படுவதற்கு முன்னதாக, லாகூரில் உள்ள அவரது இல்லத்தில் விமானப் பயணத்தைத் தாங்கும் அளவுக்கு உடல் நிலையை ஸ்திரப்படுத்தும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன என்று தெரிவித்தார்.

Wed, 11/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை