மலேசியாவின் கடைசி சுமத்ரா காண்டாமிருகம் உயிரிழந்தது

மலேசியாவின் கடைசி சுமத்ரா காண்டாமிருகம் மாண்டதாக சபா மாநிலத்தின் சுற்றுலா, கலாசாரம் சுற்றுச்சூழல் அமைச்சர் கிறிஸ்டீனா லியூ தெரிவித்தார். பெண் காண்டாமிருகமான இமான் கடந்த சனிக்கிழமை அதிகாலை 5:35 மணியளவில் மாண்டதாக அவர் கூறினார். கடந்த சில வாரங்களாக இமான் நோய்வாய்ப்பட்டு இருந்ததாக அமைச்சர் கிறிஸ்டீனா கூறினார்.

இமான் 2014ஆம் ஆண்டு காட்டில் இருந்து பிடிக்கப்பட்டது.

இமானை வனவிலங்கு பூங்காவிற்கு கொண்டுவந்த பின்னர் அது நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்ததாக வனவிலங்கு அதிகாரிகள் கூறினர்.

மலேசியாவின் கடைசி ஆண் காண்டாமிருகமான தம் கடந்த மே மாதம் மாண்டது.

ஒரு காலத்தில் ஆசியாவில் பரவலாக காணப்பட்ட சுமத்திரா காண்டாமிருகங்கள் தற்போது காடுகளில் இருந்து மறைந்து 100 மிருகங்கள் மாத்திரமே எஞ்சியிருப்பதாக நம்பப்படுகிறது. அவற்றில் பெரும்பாலானவை இந்தோனீஷியாவிலுள்ள சுமத்ரா தீவுகளில் வாழ்ந்து வருகின்றன. அது தற்போது அழிவடையும் ஆபத்துக் கொண்ட விலங்காக மாறியுள்ளது.

வாழ்விட இழப்பு மற்றும் வேட்டைக்காகரர்களால் அதிகம் பாதிக்கப்பட்டபோதும், அவை இயற்கையாக பிரிந்திருக்கும் தன்மை அழிவுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

கடைசி சுமத்திரா காண்டாமிருகத்தின் இனப்பெருக்கத்திற்கு மலேசிய நிர்வாகம் கடும் முயற்சி மேற்கொண்டபோதும் அது வெற்றி அளிக்கவில்லை.

Mon, 11/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை