புதிய சீருடை அறிமுகமும் வீரர்கள் கௌரவிப்பும்

சாய்ந்தமருது ஸஹிரியன் விளையாட்டுக் கழகத்தின் 20வது வருடப் பூர்த்தி, கழக புதிய சீருடை அறிமுகம் மற்றும் வீரர்கள் கௌரவிப்பு நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (03) சாய்ந்தமருது பேல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

ஸஹிரியன் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.எச்.ஜிப்ரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நௌபர் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் கெளரவ அதிதிகளாக பிரதேச சபை உறுப்பினர் ஏ. பஸ்மிர், ஸஹிரியன் விளையாட்டுக் கழகத்தின் ஆலோசகர் ஷரீப் ஹக்கீம், ஸஹிரியன் விளையாட்டுக்கழக ஸ்தாபகரும் செயலாளருமான எம்.எச்.எம். காலீடீன், பொருளாளர் எம்.எச்.நாஸர், கழக தெரிவுக் குழுத் தலைவர் றியாத் ஏ.மஜீத்,ஓய்வு பெற்ற மக்கள் வங்கியின் முகாமையாளர் எம்.எஸ்.எம்.மசூட், லாப் கேஸ் நிறுவனத்தின் வடக்கு, கிழக்கு பிராந்திய முகாமையாளர் எம்.எம்.எம். றிஸ்வான்,சமூக சேவையாளர் எம்.அமீன், கழக பயிற்சியாளர் எம்.எம்.எம்.றியாஸ் உள்ளிட்ட விளையாட்டு ஆர்வலர்கள், வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கடந்த 20 வருட காலம் கழகத்தை சிறப்பான முறையில் வழிநடாத்திய கழக நிர்வாகத்தினருக்கு அதிதிகளினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கழகத்தின் சார்பில் இவ்வருடம் சுற்றுப் போட்டிகளிலும், சிநேகபூர்வ போட்டிகளிலும் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்கள் அதிதிகளினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நெய்னாகாடு விசேட நிருபர்

Fri, 11/08/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக